மனித மண்டை ஓடுகளாலான கோபுரம் கண்டுபிடிப்பு !

201707041124574969_Archaeologists-find-tower-made-from-hundreds-of-human-skulls_SECVPF.gif Saturday, July 15th, 2017

மெக்சிக்கோவில் 676 மனித மண்டையோடுகளால் ஆன வட்ட வடிவ கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால அஸ்டெக் கோவில் அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த மண்டையோட்டுக் கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி கலாசாரம் இருந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்டெக் மற்றும் மெசோ அமெரிக்கன் மக்கள் சூரிய கடவுளுக்கு நரபலி அளித்து வந்துள்ளமை வரலாற்றாசிரியர்களால் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரமானது ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தமது குடிமக்களைக் காக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு மண்டை ஓடு மட்டும் ஸ்பானியர் ஒருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டையோட்டுக் கோபுரம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை ஆய்வாளர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே ஆய்வுக்கு உட்படுத்தி வந்துள்ளனர்.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…