மனித இனத்தை சிலந்திகளால் இல்லாதொழிக்க முடியும் – அதிர்ச்சி தகவல் வெளியானது!

Thursday, January 3rd, 2019

உலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தால் வெறும் 12 மாதத்திற்குள் மனித இனத்தையே அவைகளால் தின்று தீர்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்ட இந்த பகீர் தகவல் மனித இனத்திற்கே சவாலாக அமைந்துள்ளது.

தற்போதுவரை பெரும்பாலான சிலந்திகள் பூச்சிகளையே உணவாக கொள்கின்றன. ஆனால் சில காட்டுவகை சிலந்திகள் பல்லிகள் பறவைகள் மற்றும் சிறிய வகை பாலூட்டிகளையும் உணவாக கொள்கின்றன.

ஆனால் சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில் உலகில் உள்ள மொத்த சிலந்தி வகைகளும் உண்ணும் உணவின் மொத்த எடையானது மொத்த மனித இனத்தின் எடையை விடவும் அதிகம் என பகீர் கிளப்பியுள்ளனர்.

பூமியில் உள்ள மொத்த சிலந்தி வகைகளும் ஆண்டுக்கு சுமார் 440.9 இல் இருந்து 881.8 மில்லியன் டன் உணவு உட்கொள்கின்றன.

அதாவது உலகில் உள்ள மொத்த இளைஞர்களின் உடல் எடையே 316.3 மில்லியன் டன் என கூறப்படும் நிலையில் சிலந்திகள் ஓராண்டில் எடுத்துக் கொள்ளும் உணவின் எடை இதை விட அதிகம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் மொத்த மனித இனத்தையே ஓராண்டில் தின்று முடித்தாலும் உணவின்றி பல எண்ணிக்கையிலான சிலந்திகள் மிஞ்சும் என ஆய்வாளர்கள் பீதியை கிளப்பியுள்ளனர்.