போலிகளை கண்டுபிடிப்பதற்கு பேஸ்புக்கில் புதிய நுட்பம்!

Saturday, June 23rd, 2018

 பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக ஏராளமான புரளிகளும் ஸ்பாம்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

ஏனைய பயனர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இவற்றின் ஒரு அங்கமாக இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை நகல் செய்யப்படும் போஸ்ட்களையும் கண்டறியும் ஆற்றல் இத் தொழில்நுட்பத்திற்கு காணப்படுகின்றது.

இந்த தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தில் ப்ரொடெக்ட் மனேஜராக பணியாற்றுபவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts: