பொதிகள் சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் புகுந்த பெண்!

சீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் டாங்கவுண் என்னும் புகையிரத நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலையில்பயணிகளின் லக்கேஜ்கள், கைப்பைகளை சோதனை செய்வதற்கு எக்ஸ்ரே இயந்திரம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் அதிகாரிகள் புகையிரத நிலையத்திற்கு வந்த பெண்ணின் கைப்பையை சோதனையிடுவதற்காக எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் அனுப்பமுயற்சித்துள்ளனர். ஆனால் தனது கைப் பையிற்குள் பணம் இருக்கின்றது அதனை திருடிவிடுவார்கள் என கூறி கைப்பையுடன் தானும் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள்சென்றுள்ளார்.
இவரது உருவம் இயந்திரத்திற்குள் சென்று வந்து கொண்டிருந்ததால் அங்கே காத்திருந்த பயணிகள் பரிசோதனை இயந்திரத்தை பார்த்து பயந்துள்ளனர். வெளியேவந்த பெண்ணிடம் கேட்ட போது திருட்டு பயம் என் பையை அப்படியெல்லாம் தனியாக விட முடியாது என கூறியுள்ளார்.
Related posts:
இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு!
பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
பல மில்லியன் கணக்கான கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது: உறுதிப்படுத்தியது யாகூ!
|
|