பேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் விரைவில்!

சமூக வலைதளமான பேஸ்புக் மெசேஞ்சரில் டிஸ்லைக் என்ற பட்டன் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் டெக் க்ரன்ச் இதழில் கூறியுள்ளதாவது, பேஸ்புக்கில் கடந்த வருடம் நமது உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக காதல், கோபம். நகைச்சுவை உள்ளிட்ட ஆறு உணர்வு குறியீடுகள் சேர்க்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பேஸ்புக் மெசேஞ்சரில் டிஸ்லைக் எனப்படும் தம்ப்ஸ் டவுன் எனும் பட்டன் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் பேஸ்புக் நிறுவனமானது பேஸ்புக்கின் மெசேஞ்சர் சேவையை சுவாரஸ்யமானதாக மாற்ற தங்களால் இயன்ற முயற்சிகளை சோதனை அடிப்படையில் செய்து வருவதாக கூறியுள்ளது.
Related posts:
ட்ரோன் டாக்ஸியை அறிமுகப்படுத்துகின்றது சீன நிறுவனம்!
சொர்க்கத்தில் இருக்கும் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிய பேரன் : பதில் கடிதம் எழுதிய தாத்தா!
உடல் வெப்பத்தின் மூலம் காயங்களை விரைவில் ஆற்றும் புதிய முறை நாசாவினால் கண்டுபிடிப்பு!
|
|