பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் மாற்றம்!

Thursday, October 25th, 2018

வீடியோ சட்டிங் குரல்வழி அழைப்பு மற்றும் கோப்புக்களை பரிமாறல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது.

இதனை உலகளவில் சுமார் 1.3 பில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் சில அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயனர்கள் இந்த அப்பிளிக்கேஷனை இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்படி சில அம்சங்கள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மற்றும் சில அம்சங்கள் தரப்பட்டுள்ள இடங்களில் இருந்து வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் 2014 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் இந்த அப்பிளிக்கேஷனின் பயன்பாடு வரவுள்ள மாற்றங்களினால் எந்த குந்தகமும் விளையானது என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: