பேஸ்புக் அறிமுகம் செய்த புதிய வசதி!

Sunday, April 10th, 2016

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆரம்ப காலங்களில் நண்பர்களிடையே புகைப்படங்களை பகிரும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.

அதன் பின்னர் வீடியோக்களை பகிரக்கூடிய வசதியினையும் அளித்திருந்தது. இவ்வாறான நிலையில் தற்போது மற்றுமொரு புத்தம் புதிய வசதியினை வழங்கி தனது பயனர்களை கௌரவித்துள்ளது.

அதாவது இதுவரை காலமும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை மட்டுமே பகிரக்கூடியதாக இருந்த நிலையில் தற்போது நேரடி ஒளிபரப்புக்களையும் பகிரக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

Going Live எனும் இப்புதிய வசதியின் ஊடாக பேஸ்புக் குழுக்கள், தெரிவு செய்யப்பட்ட தனிப்பட்ட நபர்கள் ஆகியோருக்கிடையில் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

தற்போது iOS சாதனங்களில் பேஸ்புக் அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்வதன் மூலம் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அன்ரோயிட் சாதனங்களில் இவ் வசதி அடுத்துவரும் வாரங்களில் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: