பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி!

image_9ba68c2f49 Friday, October 6th, 2017

சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பேஸ்புக், புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்களுடைய முகத்தை நுட்பமாகப் பரிசோதித்து (ஸ்கான்), மீண்டும் பேஸ்புக்கை இயங்கச் செய்யக் கூடிய வகையில், புதிய வசதி மேம்படுத்தப்படவுள்ளது.

பேஸ்புக்கில், கடவுச் சொல்லை, பயனர் ஒருவர் மறந்துவிடும் பட்சத்தில், அலைபேசிக்கு இரகசிய இலக்கம் ஒன்றை அனுப்புவதன் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடுப்பினை அனுப்பி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே, மீள இயங்கச் செய்ய முடியும்.

எனினும் தற்போது அதற்கு அடுத்தபடியாக, முகத்தை ஸ்கான் செய்வதனூடாக, உடனடியாக கணக்கை மீளப் பெற்றுக்கொள்ள முடியும். அலைபேசிப் பாவனையாளர்களுக்கு இந்த வசதி, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இப்போது, ஒருசில பாவனையாளர்களுக்கு இந்த வசதியினை வழங்கி வருவதாகவும், தொழில்நுட்ப ரீதியான பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும், பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வசதியில், பாவனையாளரின் முகம் ஸ்கான் செய்யப்படாதவிடத்து, கணக்கு முடக்கிவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசிக்கு இரகசிய இலக்கங்களை அனுப்புதல், மின்னஞ்சலின் ஊடாக உறுதிப்படுத்துதல் போன்ற வசதிகளுக்கு மேலதிகமாக,இந்தப் புதிய வசதியினையும் பாவனையாளர்கள்  உபயோகிக்க முடியும்.