பேரிடர் கால உதவிக்காக உருவாக்கப்பட்டது ரோபோ!

Monday, May 27th, 2019

ஹை க்யூ- ரியல் என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த ரோபோவின் இழுவைத் திறனைச் சோதிக்க விரும்பிய விஞ்ஞானிகள் விமானம் ஒன்றை இழுக்க வைக்க முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இதன் கால் பகுதிக்கு வழுக்காமல் இருக்க சிறப்பு ரப்பர் பொருள் பொருத்தப்பட்டது.

இதையடுத்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட சிறிய ரக விமானத்தை ஹை கியூ ரியல் இழுத்துச் சென்றது.

வெறும் 127 கிலோ எடை கொண்ட அந்த ரோபோ விமானத்தை 30 அடி தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து குறிப்பிட்ட ரோபோவை செயல்பாட்டுக்கு கொண்டவர இருப்பதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளார்.


மொத்த வருமானத்தையும் இழப்பீடாக செலுத்தத் தேவையில்லை-அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரது பெயர் நிராகரிப்பு!
புதிய அம்சங்களை அறிவித்தது பேஸ்புக்!
இலங்கையில் இராவணனின் தாயின் கல்லறை கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்திற்கு சிலிக்கான் சிப்பில் பெயர்களை அனுப்ப ஒரு இலட்சம் இந்தியர்கள் பதிவு!