பெப்ரவரியில் பூமிக்கு அருகில் வரும் விண்கல்?

Sunday, January 21st, 2018

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி பூமிக்கு அருகில் விண்கல் ஒன்று வரவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2002யுது129 என்று பெயரிடப்பட்ட விண்கல்லானது 1.1 கிலோமீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 இலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கிவரும்.

நாசாவின் வகைப்பாட்டின் படி பூமி சுற்றுப்பாதையில் 0.05 வானியல் அலகுகளில் விண்கற்கள் எங்கும் பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பெரிய விண்கல் பூமியைத்தாக்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என சில விஞ்ஞானிகள் எதிர்வுகூறினாலும் பெப்ரவரியில் பூமியை நெருங்கிவரும் விண்கல் பூமியைத்தாக்க வாய்ப்பில்லை என நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts: