பூமியை நோக்கி வரும் பேராபத்து! உயிரினங்கள் அழிந்து போகுமா?

Saturday, September 17th, 2016

பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என இலங்கை வானியல் ஆராய்ச்சியாளர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அது பூமியில் மோதினால், பூமியின் சுற்றுப்பாதையில் சாய்தல் அல்லது நில பகுதியில் உரசுப்பட்டால் வானத்தில் தூசி மென்படலம் உருவாகி, சூரிய ஒளி இல்லாமல் போய்விடும். இதனால் பூமியிலுள்ள உயிரினங்கள் அழிந்து போகும் பேராபத்து உள்ளது.

விண்கல் கடலில் விழுந்தால் 800 மீட்டர் அளவிலான பாரிய சுனாமி அலை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். குறித்த விண்கல் மணிக்கு 5000 கிலோ மீற்றர் வேகத்தில் பூமிக்கு அருகில் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 download-217-300x201

Related posts: