பூமியை ஒத்த சாயல்கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு!

Friday, December 15th, 2017

பூமியை ஒத்த சாயலைக்கொண்ட கிரகத்தை கனேடிய விண்வெளி ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சூரிய மண்டலத்தில் காணப்படும் K2-18b என்னும் கிரகம் பூமியைப்  போன்று காணப்படுவதாக கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழக விண்வெளி ஆரச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 பூமியிலிருந்து 111 மைல் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் பாறைகளால் சூழ்ந்துள்ளதனால் உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் மற்றும் பருகுநிலை தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாகவும், வேற்றுக்கிரகவாசிகாளான ஏலியன்ஸ்கள் வாழக்கூடிய கிரகமாகவும் இது இருக்கக்கூடும் என்கின்ற கருத்தையும் வானிலை மைய ஆராச்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த கிரகம் மிகவும் துல்லியமான தொலைநோக்கியின் உதவியோடு ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்படுவதாகவும், K2-18b கிரகத்திற்கு அருகில் K2-18c என்ற கிரகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கிரகங்கள் தொடர்பான சுவாரசியமான தகவல்களை விரைவில் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: