பூமிக்கு இணையான தண்ணீர் உள்ள புதிய கிரகம்  கண்டுபிடிப்பு!

Friday, April 7th, 2017

பூமிக்கு இணையானது எனக் கூறப்படும் G.J 1132 B எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தை சுற்றி வாயு படலம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது கோள் மண்டலத்திற்கு வெளியில் உள்ள கிரகம் ஒன்றில் வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.சூப்பர் ஹேர்த் என அழைக்கப்படும் இந்த கிரகமானது பூமியை விட 5 மடங்கு பெரியது. இந்த கிரகம் பூமியில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

தண்ணீர் மற்றும் மீதேன் வாயு என்பன கலந்து இந்த கிரகத்தின் வாயு கோலம் அமைந்துள்ளது. எது எப்படி இருந்த போதிலும் குறித்த கிரகத்தின் வெப்ப நிலை 370 செல்சியஸ் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இதனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்தில் உயிர்கள் வாழக் கூடும் என்பது சந்தேகத்திற்குரியது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கிரகம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு தகவல் வெளியிடப்பட்டது.

Related posts: