பூமிக்கு அபாய மணி – வேற்றுக்கிரகவாசிகள் தாக்கத் தயார்?

Sunday, November 6th, 2016

பயிர் வட்டங்கள் எனப்படுபவை வேற்றுக்கிரகவாசிகளால் தோற்று விக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும் இன்றுவரை அதன் மர்மம் அவிழ்க்கப்பட வில்லை என்பதே உண்மை. அது போலவே தொடர்ந்தும் பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டு கொண்டே வருகின்றன.

ஆய்வாளர்கள் பயிர் வட்டங்களை உருவாக்குபவர்கள் வேற்றுகிரகவாசிகள் எனவும் சாதாரண மனிதர்களினால் அதுவும் தற்கால தொழில்நுட்பத்தில் இவற்றினை உருவாக்கிவிட முடியாது எனவும் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

3

ஆனாலும் இதனை யார் உருவாக்கினார்கள் உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள் என்ற கேள்வியையும் தாண்டி பிரமிப்பிற்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விடயம் ஒன்று இந்த பயிர் வட்டங்கள் மூலம் இடம் பெற்றுள்ளது.

இந்த பயிர் வட்டம் மூலமாக உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதே அது. ஆய்வாளர்கள் வெளிப்படையாக கூறாவிட்டாலும் மறைமுகமான பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொள்ள வைத்துள்ளது இந்த எச்சரிக்கை.

2

கடந்த 2002ஆம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் திகதி இங்கிலாந்தில் உள்ள Sparsholt – Hampshire என்ற இடத்தில் ஒர் பிரம்மாண்ட பயிர்வட்டம் உருவானது.

குறிப்பாக பயிர் வட்டங்கள் கணிதவியல் குறியீடுகள் அல்லது மர்ம குறியீடுகளை காட்சிப்படுத்துவதாக அமையும் ஆனால் இது வேற்றுக்கிரகவாசிகளின் உருவத்தை அப்படியே தெட்டத்தெளிவாக காட்டியது. மேலும் இது பார்ப்பதற்கு தத்ரூபமாக பயிர்களில் அச்சிடப்பட்டதனைப் போன்று இருந்துள்ளது.

கோபமான பார்வையுடன் கையில் வட்டமாக எதையோ காட்டுவது போல் அந்த உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உருவம் மனித குலத்திற்கு எவ்வாறான கருத்தை முன்வைக்கின்றது என்பதை ஆராய்சியாளர்கள் மிகுந்த சிரமத்தின் பின் கண்டுபிடித்தனர். அது “8 Bit Binary Code ASC II” எனும் கனிணிமொழியில் அமைந்திருந்தது.

1

எங்களின் எதிரிகள் ஏமாற்றுக்காரர்கள் பொய்யான வாக்குறுதிகளையும், பொய்யான பரிசுகளையும் கண்டு ஏமாற வேண்டாம், அதிக வலியிருந்தாலும் இன்னும் நேரம் இருக்கின்றது, அவர்களிடமிருந்தும் விலகியிருப்பது நன்மை. (கடைசியாக மணியின் சத்தம்)என்றவாறு அமைந்திருந்தது அதில் காணப்பட்ட சங்கேத மொழி.

இது ஓர் அபாய எச்சரிக்கையே என்றாலும் இதனை மனிதர்கள் தான் மேற்கொண்டிருப்பார்களா? என கோணத்தில் சிந்தித்தால் அதுவும் தோல்வியில் தான் முற்றுப்பெற்றது. காரணம் இதனை மனிதர்கள் தயாரித்திருப்பதற்கான காரணமோ சாத்தியக்கூறுகளோ அல்லது சான்றுகளோ கிட்டவில்லை.

4

அதன் காரணமாக வேற்றுகிரகவாசிகள் தான் இதனை உருவாக்கியுள்ளார்கள், அவர்கள் பூமி வாசிகளுக்கு ஏதோ கூற வந்துள்ளார்கள் என தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒவ்வோர் பயிர்வட்டமும் ஏதோ ஒன்றை அறிவிப்பதற்காகவே பூமியில் வரையப்படுகின்றன என விஞ்ஞானிகள் திட்ட வட்டமாக நம்புகின்றனர் ஆனாலும் இது வரையில் அவை வெளிப்படுத்தவில்லை அதற்கான காரணமும் கூறப்படுவதில்லை.எவ்வாறாயினும் எதிர்காலத்தில் அத்தனையும் வெளிச்சத்திற்கு வரும் என்பதே உண்மை

Related posts: