பூமிக்குள் கடல் நீர் மட்டம்…ஆய்வில் கண்டுபிடிப்பு!
Sunday, November 27th, 2016
பூமிக்குள் 620 மைல்கள் உட்பகுதியில் கடல் நீர் இருப்பதாக புளோரிடா அரச பல்கலைக்கழகம் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியின் எடையில் 1.5 வீதமான நீர் மட்டம் பூமிக்குள் களஞ்சியமாகி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பூமிக்குள் இந்த நீருடன் பெருந்தொகையான வைரமும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியின் மத்தியில் இருக்கும் எரி குழம்புகள் மற்றும் வெப்பம் வெளியில் வராத வகையில் இந்த நீர் பூமியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகிறது.
பூமிக்குள் நீர் மட்டம் குறைந்த இடங்களில் எரி மலைகள் வெடிக்கின்றன. ஒரு நாட்டில் எரிமலைகள் இல்லை என்றால், அந்த நாட்டிற்கு கீழ் மட்டத்தில் பெருமளவிலான நீர் மட்டம் காணப்படுகிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நீர் மட்டத்தின் ஊடாகவே பூமி தட்டுகள் நகர்கின்றன. இதனால், பூமிக்குள் இருக்கும் பாரிய நீர்மட்டத்தை பாதுகாக்க பாதுகாப்பான முறையில் செயற்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்
Related posts:
|
|