புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை !

Monday, July 20th, 2020

இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசு இலங்கை மன்னனான இராவணன் மற்றும் நாட்டின் விமான போக்குவரத்து வரலாறு குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்த விரும்புவதாகவும் இராவண மன்னன் மற்றும் இப்போது இழந்த வான்வழி பாதைகளில் பண்டைய ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சி திட்டத்தை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஆரம்பிக்கவுள்ளது.

5000 ஆண்டுகளுக்கு முன்பு இராவணன் விமானத்தில் பறந்து விட்டதாகவும், உலகின் முதல் விமானி என்றும் இலங்கை நம்புகிற நிலையில் பண்டைய காலகட்டத்தில் பறக்கப் பயன்படும் முறைகளைக் கண்டறிய நாடு இப்போது ஆர்வமாக உள்ளது என்றும் தெரிவித்து ஆராய்ச்சியின் முதல் கட்டமாக, இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் பிற வரலாற்று உள்ளடக்கங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

விமானத்தைப் பறக்கவிட்ட முதலாவது ஆள் இராவணன் என்பதை நிரூபிக்க அரசாங்கத்திற்கு மறுக்கமுடியாத உண்மைகள் இருப்பதாகவும் இராவணன் ஒரு மேதை, அவர் தான் முதலில் பறந்தார், அவர் ஒரு விமானியாக இருந்தார் என்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது ஐதீக கதை அல்ல, இது ஒரு உண்மை என்றும் இது குறித்து விரிவான ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை தாங்கள் நிரூபிப்போம் என்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இராமாயணத்தைப் பொறுத்தவரை, விஸ்வகர்மா நிர்மாணித்த “புஸ்பக” என்ற விமானத்தைப் இராவணன் பயன்படுத்தினான் என்றும் இதிகாசத்தின் பிரகாரம் சீதையைக் கடத்திச் சென்றபோது இராவணன் விமானத்தைப் பயன்படுத்தியிருந்தான் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இந்த முயற்சிக்கு பங்களிக்க விரும்பும் எவரும் இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களை மின்னஞ்சல் மூலம் mgrrdp@caa.lk அல்லது ஜூலை 31 க்கு முன் 076-6317110 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

Related posts: