புத்தம் புதிய கைப்பேசி!
Tuesday, October 18th, 2016தற்போதெல்லாம் மிகவும் மெலிதான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிவிட்டன.அடுத்த கட்டமாக வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இம் முயற்சியின் பயனாக தற்போது கனடாவிலுள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள Human Media Lab இல் பணியாற்றும் குழு வளையும் கைப்பேசியின் மாதிரி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
Whammy Phone என அழைக்கப்படும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசியானது OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது.
இன்றைய தினம் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்ற Human-Computer Interaction நிகழ்வில் இக் கைப்பேசியின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.குறித்த விளக்கம் தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இக் கைப்பேசியின் ஏனைய சிறப்பம்சங்கள் உட்பட அறிமுகமாகும் திகதி தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Related posts:
|
|