புதிய Wireless ஹெட்போன்களைத் தயாரித்து வரும் சாம்சங்!

Wednesday, January 4th, 2017

சாம்சங் நிறுவனம் தனது சொந்த Air-pod போன்ற சாதனத்தை தயாரித்து வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Earbuds என்ற பெயரில் அந்நிறுவனம் புதிய Wireless ஹெட்போன்களைத் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களின் படி, புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனுடன் Earbuds சாதனத்தை சாம்சங் வெளியிடும் என கூறப்படுகிறது.

அப்பிள் Air-pod சாதனத்திற்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் இதனை அறிமுகம் செய்யவுள்ளது.

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி, புதிய Wireless இயர்போன்கள் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன்களுடன் வெளியிடப்படுமா அல்லது தனியே விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இதனால் புதிய ஸ்மார்ட்போனில் 3.5 mm ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

அத்துடன், சாம்சங் Earbuds இல் ஹர்மன் தொழில்நுட்பம், Air-pod களில் ஆண்ட்ராய்டு சின்க் அம்சம் வழங்கப்பட்டதைப் போன்ற விசேட அம்சம் சாம்சங் Earbuds களிலும் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

ஒருவேளை சாம்சங் Earbuds வெளியிடப்பட்டாலும், இது அந்நிறுவனத்தின் முதல் சாதனமாக இருக்காது. ஏற்கனவே சாம்சங் கியர் ஐகான்X என்ற ஹெட்போன்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

samsung-earbuds

Related posts: