புதிய சாதனைக்காக காத்திருக்கும் நாசாவின் ரோவர் விண்கலம்!

Friday, February 23rd, 2018

செவ்வாய் கிரகம் தொடர்பிலான ஆராய்ச்சிக்காக நாசா நிறுவனத்தினால் ரோவர் எனப்படும் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

2004ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட இவ் விண்கலம் சுமார் 13 வருட காலத்தினை செவ்வாய் கிரகத்தில் கழித்துள்ளது.

இதன் காரணமாக அண்மையில் 5,000 நாட்களை எட்டி புதிய சரித்திரம் படைத்துள்ளது.

இவ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள் தொடர்பிலும், நீர் மற்றும் காற்று தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஏற்கணவே குறித்த விண்கலத்தினை பூமிக்கு திருப்ப திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 5,000 நாட்களை பூர்த்தி செய்வதற்காக குறித்த திட்டம் பிற்போடப்பட்டிருந்தது.

இதேவேளை இவ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து இதுவரை சுமார் 225,000 படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.