புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாஷா!

பூமி போன்ற புதிய கிரகங்களை கண்டுபிடிக்க நாஸாவின் புதிய விண்கலம் ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் பூமி போன்ற வாழும்தகுதியுடைய கிரகங்களை தேடும் முயற்சி தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
இதனால் அதிக சக்திவாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கமராக்களை கொண்ட டி.இ.எஸ்.எஸ் என்ற புதிய விண்கலத்தை ஆராய்ச்சிக்காக அனுப்புவதற்கு தயாரித்துள்ளது. இந்தியா மதிப்பில் ரூபா 2ஆயிரத்து 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று மாலை 6.32 மணியளவில் அமெரிக்காவின் புளோரி மாகாணத்தில் உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. 2ஆண்டுகளுக்கு செயற்பட கூடிய இந்த விண்கலத்தின் மூலம், புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|