புதிய எரிபொருள் இலங்கையில் கண்டுபிடிப்பு!
Saturday, November 12th, 2016
எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ரூபசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
உலகம் முகம் கொடுக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய எரிபொருள் காணப்படும் என இலங்கை விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Related posts:
|
|