புதிய உள்ளம்சங்களை Rakuten Viber தற்போது அறிமுகம் செய்கின்றது!

Saturday, February 15th, 2020

உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற app ஆன Rakuten Viber, புதிய உள்ளம்சமான My Notes ஐ தற்போது அறிமுகம் செய்த வண்ணமுள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக, வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் சிறிய தருணங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளல், தினசரி செயற்பாடுகளை எளிமைப்படுத்தல் மற்றும் பாவனையாளர்களுடன் தினசரி தொடர்புகளை ஆழப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதியை கொண்டிருக்கும்.

பயனர்களின் தினசரி பல்வேறு செயற்பாடுகளை கையாளல், தகவல்கள், அழைப்புகள் மற்றும் வீடியோக்களை பெறும் வேளையில் பணியாற்றல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரிதொரு மொபைல் app ஐ பதிவிறக்கம் செய்ய விரும்புவதில்லை. இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், Viber இனால் My Notes எனும் புதிய உள்ளம்சம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

பாவனையாளர்களின் chat list இல் தினசரி செய்ய வேண்டியவை, புகைப்படங்கள், நினைவூட்டல்கள் மற்றும் அனைத்தையும் ஒரே பகுதியில் பேணக்கூடியதாக இருக்கும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுடன், ஒவ்வொரு நிமிடத்திலும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான தொடர்பாடல்கள் Viber app இல் இடம்பெறும் நிலையில், புதிய My Notes ஊடாக, பயனர்களின் தினசரி செயற்பாடுகளை சௌகரியமாகவும், வினைத்திறன் வாய்ந்த வகையிலும் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

Viber இல் தினசரி தகவல் பரிமாற்றம் மற்றும் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் செயற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளம்சத்தினூடாக:

– செய்யவேண்டிய நிரல் தயாரிக்கப்படுவதுடன், அவை பூர்த்தியானவுடன் குறியிட்டுக்கொள்ளக்கூடிய வசதி

– விருப்பமான தகவல்கள், வீடியோக்கள், படங்களை ஒரே பகுதியில் சேகரித்து வைத்தல்

– எந்தவொரு சாதனத்திலும் ளுலnஉ செய்யும் வசதி (உதாரணம்: மொபைல், டெஸ்க்டொப், டப்லெட் போன்றன)

– மிகவும் முக்கியமான குறிப்புகள் தொடர்பில் நினைவுபடுத்தல்களை நிர்ணயித்தல் (விரைவில் அறிமுகமாகும்)

எமது பாவனையாளர்களின் தினசரி வாழ்க்கையை இலகுபடுத்துவது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், My Notes உடன் இதை நாம் மற்றொரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளோம். வேகமான செயற்பாடு மற்றும் பிரத்தியேகத்தன்மையை பாதுகாக்கும் பாதுகாப்பு உள்ளம்சங்கள் போன்றவற்றின் காரணமாக, Viber எமது பாவனையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் சகல சிந்தனைகள், வாழ்த்துக்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் ஒரே app இல் ஒழுங்குபடுத்திக் கொள்ளக்கூடிய வசதியை நாம் அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.டு என app இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஒஃபிர் எயால் கூறினார்.

Related posts: