பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில்!

Wednesday, June 22nd, 2016
ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.26 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில் முக்கிய செயற்கைக்கோள் இஸ்ரோவின் கார்டோசாட்-2 வரைபடம் கடல்வழி போக்குவரத்து கண்காணிப்பு நீர்வள மேம்பாடு நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது.

ஏனைய செயற்கைக்கோள்களில் அமெரிக்கா(13) கனடா(2) ஜெர்மனி(1) இந்தோனேசியா(1) சத்யபாமா பல்கலை(1) புனே பொறியியல் கல்லூரி(1) ஆகியவை அடங்கும்.

நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்.எல். வகையில் 14-ஆவது ரொக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-34 ஆகும். இதன் எடை 320 தொன் என்பது குறிப்பிடத்தக்கது.

Untitled-1 copy

Untitled-4 copy

Untitled-3 copy

Untitled-2 copy

Related posts: