பிரித்தானியாவில் ரோமானியர்கள் காலத்து வீடு கண்டுபிடிப்பு!

Monday, April 18th, 2016

பிரித்தானியாவில் விவசாயி ஒருவர் தமது வீட்டின் தோட்டத்தில் பள்ளம் தோண்டியதில் ரோமானியர்கள் பயன்படுத்திய கிராமத்து வீடு ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் வில்ஷைர் பகுதியில் உள்ள Tisbury அருகே குடியிருந்து வரும் லூக் இர்வின் என்பவரது தோட்டத்தில் இந்த ரோமானியர் காலத்து கிராம வீட்டை கண்டறிந்துள்ளனர்.

இர்வின் தமது குழந்தைகளின் பயன்பாட்டிற்காக தோட்டத்தில் பள்ளம் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் இருந்து தென்பட்ட பாகங்கள் விசித்திரமாக காட்சி தரவே, அவர் உடனடியாக தொல்லியல் ஆராட்சியாளர்களை அழைத்து தகவலை பகிர்ந்துள்ளார்.

உடனடியாக இர்வின் கூறிய பகுதிக்கு விரைந்து வந்த தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டறியப்பட்ட பாகங்கள் ரோமானியர்களின் காலத்தில் பயன்படுத்தியது என உறுதிப்படுத்தினர்.

ரோமானியர் காலத்தில் கிராமத்து வீடுகளின் தரைகளில் பயன்படுத்தும் மொசைக் சேதமின்றி இன்றளவும் இருப்பதை தொல்லியலாளர்கள் வியப்புடன் பதிவு செய்தனர்.

இர்வின் சுட்டிக்காட்டிய பகுதியில் 8 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் அங்கிருந்து பல்வேறு தொன்மையான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

நாணயங்கள், மிருகங்களின் எலும்புத் துண்டுகள், உடை ஊசி உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுப் பொருட்கள் கிட்டியுள்ளது.

இந்த வீடு கிறிஸ்து பிறப்பிற்கு பின்னர் 175 ல்இருந்து 220 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதுவரை பிரித்தானிய தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டவைகளில் வைத்து பாரிய புதையலை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: