பல பவுண்ட் எடையினையும் நகர்த்தும் சிறிய ரோபோ!

ரிமோர்ட் கன்ரோலில் இயங்கும் சிறிய ரக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது சுமார் 9,000 பவுண்ட்ஸ் வரை எடைகொண்ட பொருட்களை அசால்ட்டாக நகர்த்திச் செல்லக்கூடியது.
இதனை பொவாக வாகனங்களை நகர்த்திச் செல்வதற்கு பயன்படுத்த முடியும். எனினும் இந்த ரோபோ வெவ்வேறு பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பதிப்பும் வெவ்வேறு அளவிலான எடைகளை நகர்த்தக்கூடியது. இதற்கேற்ப அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன.
உதாரணமாக 3,500 பவுண்ட்ஸ் எடையை நகர்த்தக்கூடிய ரோபோ 2,100 டொலர்களாகும்.
அதேபோன்று 5,500 பவுண்ட்ஸ்களை நகர்த்தக்கூடிய ரோபோ 3,400 டொலர்களாகவும், 9,000 பவுண்ட்ஸ் எடையை நகர்த்தக்கூடிய ரோபோ 4,100 டொலர்களாகவும் காணப்படுகின்றது.
இவற்றில் தரப்பட்டுள்ள மின்கலமானது 30 நிமிடங்கள் வரை செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பூமியே பாறையாக மாறிவிடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
இரண்டாம்உலகப்போர்காலத்து குண்டு பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாஷா!
|
|