பலூனில் பறந்து 11 நாட்களில் உலகை சுற்றி வந்து ரஷ்ய வீரர்!

65 வயதாகும் ரஷ்யாவை சேர்ந்த சாகச வீரர் பெடோர் கோனியுகோவ் பலூனில் தனியாக பறந்து உலகம் முழுவதும் இடைநிற்காமல் வேகமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 12-ம் திகதி ஆஸ்திரேலியாவின் நார்தம் விமான தளத்தில் இருந்து சாதனை பயணத்தை துவங்கியிருந்தார் பெடோர். இவரை பின்தொடர்வதற்காக 6 ஹெலிகாப்டர்கள் இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 184 அடி உயரமுள்ள ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பெடோர் உலகை சுற்றி வந்துள்ளார். இந்த பலூன் 1.8 டன் எடை கொண்டதாகும். 11 நாட்கள் 6 மணிநேர வெற்றிகரமான பயணத்திற்கு பின் மீண்டும் இந்த பலூன் ஆஸ்திரேலியாவின் கல்கூர்லி பகுதிக்கு அருகாமையில் தரையிறங்கியது.
இதற்கு முன்பாக, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீவ் போசட் இதே இடத்தில் இருந்து பலூனில் சுற்றுப்பயணத்தை துவங்கி 33 ஆயிரம் கிலோ மீட்டர்களை 13 நாட்கள் 8 மணிநேரத்தில் உலகை சுற்றிவந்ததே சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது 11 நாட்களுக்குள்ளாக உலகை சுற்றிவந்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறார் பெடோர் கோனியுகோவ்
Related posts:
|
|