பறவைக்கு சமமான ரோபோக்கள் சாத்தியமா?

Friday, September 2nd, 2016

வானில் பறப்பது கடினமான செயலா? பறவைகள் மட்டும் எப்படி எளிதாக பறக்கின்றன?

பறவையின் சின்னஞ்சிறு உடல், பறப்பதற்கேற்ப சிறப்பாக பரிணமித்துள்ளது.ஆனால் அதை முழுமையாய் மீளுருவாக்க மனித தொழில்நுட்பவியலாளர்களால் இதுவரை இயலவில்லை.அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உலகில் முதல் முயற்சியாக கலிபோர்னியாவின் ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முழு கட்டிடத்தையே ஒதுக்கி பறப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.அதன்மூலம் பறவைகளின் முக்கிய இரகசியங்களை அவர்களால் கவனிக்க முடிந்திருக்கிறது.

பறப்பதன் நுட்பங்களையெல்லாம் அறிவதால் என்ன பலன்? அடுத்த தலைமுறை பறக்கும் ரோபோக்களும், ஆளில்லா விமானங்களும் ஆபத்தான சூழலில் இயங்கவேண்டும்.

அது சாத்தியமானால் தான் அவை இராணுவத்தேவைகளுக்கும் ஆபத்துக்கால மீட்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படும். தற்போதைய நிலையில் பறவைகளைப்போல அவற்றால் இயல்பாக பறக்க முடிவதில்லை.

இயற்கை பல மில்லியன் ஆண்டுகளில் மேம்படுத்திய பறவையின் பறக்கும் திறனை, இயந்திர வடிவில் பிரதியாக்கம் செய்ய முயல்கிறார்கள் இந்த அமெரிக்க விஞ்ஞானிகள். அதன் மூலம் பறவையைப்போல் இயல்பாய் பறக்கவல்ல ரோபோக்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

Untitled-1 copy

Related posts: