பரிவர்த்தனை நிறுவனம் ஹேக் செய்யப்பட்டு 3500 கோடி ரூபாய் கொள்ளை!

Sunday, January 28th, 2018

ஜப்பானில் ’Coincheck’ எனும் பரிவர்த்தனை நிலையத்தை, இணையத் திருடர்கள் ‘Hack’ செய்து, சுமார் 3,500 கோடி ரூபாயை திருடியுள்ளனர்.

உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட ‘Crypto currency’-கள், சமீபகாலமாக பிரபலமடைந்து வருகின்றன. இது கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத Virtual பணமாகும்.

உலகில் சில நாடுகள் இந்த பண பரிவர்த்தனையை அங்கீகரித்துள்ளன. எனினும், இந்த முறைகள் எந்த அரசையும் சார்ந்து இல்லாமல், ரகசியமான வழிமுறைகளில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜப்பானின் டோக்கியோ நகரில் Crypto currency-யான ‘Coincheck’ எனும் பரிவர்த்தனை நிலையம் உள்ளது. இதனை, இணையத் திருடர்கள் Hack செய்து, சுமார் 3,500 கோடியை கொள்ளையடித்துள்ளனர்.

இதுதொடர்பாக, Crypto currency பரிவர்த்தனை நிலையம் சார்பில் அந்நாட்டு நிதியமைச்சகத்திற்கும், பணக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில், ஜப்பானின் எம்டி.கோக்ஸ் என்னும் நிறுவனம், 3,350 கோடி மதிப்பிலான பிட்காயின்களை இழந்தது. அதனால் அந்நிறுவனம் திவாலானதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: