பயங்கரமான சுரங்க நதி கண்டுபிடிப்பு!

Wednesday, October 26th, 2016
தெளிவான மற்றும் பயங்கரமான சுரங்க நதி அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழங்கள் இரண்டும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த நதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி சிறிபாத பகுதிக்கு அருகில் கிலிமலே பிரதேசத்தில் இந்த சுரங்க நதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலப்பகுதியில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தெளிவான மற்றும் பயங்கரமான சுரங்க நதி கட்டமைப்பு இதுவென, ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மேலாண்மை பேராசிரியர் இராஜ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

களுகங்கையின் உப நதியான இதுருவ கங்கையில் இந்த சுரங்க நதி அமைந்துள்ளது. குருவிட்ட எரத்ன கிளிமலையின் 7500 ஹெக்டர் காடு பகுதி முழுவதும் இந்த நதி பரவி காணப்படுகின்றது.

இதுருவ காடு என அழைக்கப்படும் அந்த காட்டினுள் இந்த நதி அமைந்துள்ளது.இந்த நதியின் ஒரு பகுதி கற்பறையின் கீழ் காணமல் போயுள்ள போதிலும் கிட்டத்தட்ட 250 மீற்றர் தூரத்தில் மீண்டும் இந்த நதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நதி மறைந்து காணப்படும் பகுதியில் மணல் அடுக்கு உருவாகியள்ள நிலையில், அவ்விடம் கீழ் இறங்கும் ஆபத்தை சந்தித்துள்ளது. மழை காலங்களில் இந்த பகுதிக்கு வருவதனை தவிர்க்க வேண்டும்.கற்பகுதியின் கீழ் காணாமல் போகின்ற போதிலும் அதற்கு அருகிலுள்ள மலை பகுதியின் கீழ் இந்த நதி செல்வதனை முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் இராஜ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

animas_river_2505257g