பனிப்புகையிலிருந்து வைரம் தயாரிக்க முடியுமா?

Thursday, November 10th, 2016

சீன நாட்டில் எங்கு பார்த்தாலும் பனிப்புகை தற்போது சூழ்ந்து கொண்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பனிப்புகைகளின் அதி தீவிர தாக்கத்தால் சீனாவில் உள்ள பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டது.

இந்த பனிப்புகையால் மக்கள் பல இன்னல்களைச் சந்தித்தாலும் அதில் ஒரு அருமையான விடயம் உள்ளது தெரியுமா?அது தான் பனிப்புகையை வைத்து அதன் மூலம் வைரம் தயாரிப்பது!சீனா முழுவதும் படர்ந்துள்ள பனிப்புகைகளால் ஏற்பட்ட மாசு படிந்த காற்றை, Smog Sucking Towers எனப்படும் கோபுர வடிவிலான தூண்கள் சுத்த படுத்துகிறது.

இந்த வகையான கோபுரங்களானது ஏழு அடி உயரத்தில் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. இது சீன இயற்கை ஆராய்ச்சியாளார்களால் பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் வடிவமைக்கப்பட்டுள்ளது.அடிக்கடி ஏற்படும் மாசுகளை இது உடனுக்குடன் சரி செய்கிறது. அந்த மாசு காற்று தூய்மையானவுடன் அந்த Towerகு பின்புறமாக வருகிறது. பின்ன அந்த சுத்தமான காற்றானது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விடப்படுகிறது.

அதன் மூலம் கிடைக்கும் கார்போன்கள் தான் வைரத்தை உருவாக்க பயன்படுகிறது. அதாவது அந்த கார்பனானது 30 நிமிடங்களுக்கு இயந்திரம் மூலம் அழுத்தம் தரப்பட்டு அதிலிருந்து வைரம் உருவாக்கப்படுகிறது.

இதில் செய்யப்பட்ட வைரங்களின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இன்னும் இது போல Smog Sucking Towers கட்டுவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் இந்த ஆராய்ச்சியானது பனிப்புகை அதிகம் உள்ள நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டம் நகரில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: