பனிக்கட்டிகள் சூடாகும் அபாயம் – சுவிஸ் நாட்டுக்கு ஆபத்தா?

Thursday, February 9th, 2017

சுவிற்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத வகையில் நிரந்தர பனிக்கட்டிகள் வெப்படைந்துள்ளன. சுவிஸின் நிரந்தர பனிக்கட்டிகள் கண்காணிப்பு சேவை நிறுவனமான Permos சமீபத்தில் நடத்தியுள்ள கள ஆய்வில், கடந்த 2016 வருடத்தில் பனிக்கட்டிகள் வெப்பமாவது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

சுவிற்சர்லாந்து பிரதேசத்தில் மொத்தம் ஐந்து சதவீத அளவு நிரந்திர பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளது முக்கிய விடயமாகும்.

10-20 மீட்டர் ஆழத்தில் நிரந்தர பனிக்கட்டிகள் வெப்பநிலையானது, கடந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு அதிகமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரகம் வெப்பமானதின் விளைவே பனிக்கட்டிகளும் அதிக அளவில் வெப்பமாகியுள்ளது.கடந்த வருடம் 2016ல் கிரகம் அதிக வெப்பமானதாக இருந்ததாக உலக வானிலை மையமே சொல்லியதாக Permos கூறியுள்ளது.கடந்த இருபது ஆண்டுகளாகவே பனிக்கட்டிகளின் வேகம் வெகுவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: