பங்கு வர்த்தகத்தில் தள்ளாடும் தொஷிபா நிறுவனம்!

Thursday, December 29th, 2016

ஜப்பானின் பன்னாட்டு நிறுவனமான தொஷிபாவின் பங்குகள் மூன்றாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன.இன்றைய (வியாழக்கிழமை) வர்த்தகத்தின் தொடக்கத்தில் சுமார் 20 சதவிகிதம் அளவிற்கு பங்கின் விலை சரிந்தது.

அமெரிக்காவில் தோஷிபா கூட்டுக்குழுமமானது பல பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அதில், அணுசக்தி தொடர்புடைய வர்த்தகமும் குறிப்பிட்ட நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் டதோஷிஷிபாவின் பங்குகள் 40 சதவிகிதத்திற்கும் மேலான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

_93166223_gettyimages-630630288

Related posts: