நூறு ஆண்டுகளுக்கு பிறகு வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள்!

Thursday, November 2nd, 2017

சுவிஸின் பனிப்பாறைகள் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வேகமாக உருகத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிஸில் உள்ள 20 பனிப்பாறைகளில் இருந்து சுமார் 1.5 பில்லியன் கியூபிக் மீற்றர் என்ற அளவில் பனிக்கட்டிகள் 2016லிருந்து செப்டம்பர் 2017 என்ற காலத்தில் உருகியுள்ளன.

கடந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய பனிப்பாறைகளின் அளவை விட இது அதிகமாகும்.இவ்வாறு உருகிய நீரைக் கொண்டு சுவிஸில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 25 மீற்றர் அளவுள்ள நீச்சல் குளங்களை நிரப்ப முடியும்.இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இழப்பாக கருதப்படும் இந்நிகழ்வு கடந்த 2003 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பனிப்பாறைகள் உருக்கத்தை விட அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.150 ஆண்டுகாலத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே உலர்ந்த பனிக்காலமாக இருந்தது, மிக குறைவான பனிப்பொழிவும் இருந்தது.வழக்கத்துக்கு மாறாக சுவிஸின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் சுவிஸ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: