நிலாவில் இருக்கிறாரா ஹிட்லர்?
Monday, December 19th, 2016சர்வதேச அளவில் உலகப்புகழ் பெற்ற பல தலைவர்களின் மரணங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
அதன் படி பார்க்கையில் உலகத்தையே ஆட்டிப்படைத்த ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெவ்வேறு விதாமாக கூறப்பட்டு வருகின்றன.
அதில் கூறும் கருத்துக்கள் சிலவற்றை பார்ப்போம்.
ஜெர்மனியை ஆட்சி செய்துவந்த ஹிட்லர், அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா மற்றும் நாசா விண்வெளி மையம் ஆகியவைகளை விட முந்தி நின்றதாகவும், விஞ்ஞானிகள் மூலம் ரகசிய விண்வெளி ஓடம் மூலம் அவர் நிலவுக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிரியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட ஹிட்லர், தனது நண்பரும் விஞ்ஞானியுமான மருத்துவர் ஜோசப் மெங்காலே உதவியுடன் தன்னைப் போலவே ஒருவரை குளோனிங் முறையில் உருவாக்கி விட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் ஒரு கதை உலா வருகிறது.
புவியின் தென்துருவத்தில் நாஜிக்கள் படை மூலம் ஹிட்லர் 1930 ஆம் ஆண்டுகளில் இராணுவ தளம் ஒன்றினை அமைத்ததாகவும், இதன் காரணமாக ஹிட்லர் அங்கு கூட சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 1943ம் ஆண்டில் நாஜிக்களின் ராணுவத் தளபதியாக இருந்த அட்மிரல் கார்ல் டோனிட்ஸ் ஹிட்லருக்காக நீர்மூழ்கிக் கப்பலை கட்டமைத்ததில் ஜெர்மனி பெருமையடைகிறது என்று கூறியிருந்தார். எனவே அந்தக் கப்பலில் ஹிட்லர் அண்டார்டிகாவுக்கு சென்றிருப்பார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் நாஜிக்களின் நீர்மூழ்கிக் கப்பலை இங்கிலாந்து ராணுவம் கடந்த 1950 ஆம் ஆண்டுகளில் அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரான் டி ஹான்சிங் என்பவர் எழுதியுள்ள ஹிட்லர்ஸ் எஸ்கேப் என்ற புத்தகத்தில், ஹிட்லர் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயினுக்குத் தப்பிச் சென்றதாக அதில் கூறியுள்ளார். இதற்கு காரணம் ஹிட்லர் மரணமடைந்ததாக கூறப்பட்ட பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஹிட்லரின் உடல் இல்லை என்ற தகவல் வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்த வாதத்தினை அந்த எழுத்தாளர் முன்வைத்தார். அதேபோல ஹிட்லரின் மனைவியான ஈவா ப்ரன் உடலும் கடைசி வரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஹிட்லர் மரணம் குறித்து உலகின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை இதுவாகவே இருக்கிறது. அரசியல் நிலை தனக்கு எதிராக திரும்புவதைக் கண்ட ஹிட்லர் இனியும் நாம் உயிரோடு இருக்கக் கூடாது என முடிவெடுத்து, சயனைடினை உட்கொண்டும், தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் தனது மனைவியுடன் கடந்த 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஹிட்லரின் உதவியாளர்கள் அவரது உடலை எரித்ததாகவும், முழுமையாக உடல் எரியாததால், அதை புதைத்ததாகவும் நம்பப்படுகிறது. இவை அனைத்தும் இப்படி இருக்கையில் ஹிட்லர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற மர்மம் கடந்த 60 ஆண்டுகளாகவே நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
Related posts:
|
|