நிலவில் எரிபொருள் – ஆதாரத்தை தேடும் சீனா!

Monday, January 14th, 2019

சீனா முதன் முறையாக நிலவின் தொலைவான பகுதியில் தனது விண்வெளி ஓடமான Chang’e-4 இனை கடந்த வாரம் வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது.

இவ் விண்கலத்திலிருந்து தரையிறங்கிய Yutu 2 எனும் ரோவர் ஆனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தயாராகவுள்ளது.

இந்நிலையில் நிலவில் ஹீலியம் 3 போன்ற எரிபொருட்கள் இருப்பதற்கான ஆதாரங்களை தேடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

சீனா வரலாற்றில் முதன் முறையாக நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் அனைவரது எதிர்பார்ப்பையும் தன் பக்கம் திருப்பியிருந்தது.

எனினும் குறித்த ஆராய்ச்சியின் தொடக்கமே எரிபொருள் பற்றியது என்பதனால் ஏனைய வல்லரசு நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.