நிக்கோனின் அட்டகாச கமரா..!

Friday, August 19th, 2016

நிக்கான் (Nikon) கமெரா நிறுவனம் 4 சென்சார்களை கொண்ட அட்டகாச கமெரா ஒன்றை உருவாக்கி உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நிக்கான் தனது கமெராக்களுக்கு காப்புரிமை கோரியிருந்தது. இதன்படி கடந்த மாதம் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நிறுவனம் 4 லென்ஸ், 4 சென்சார்களை கொண்ட ஒரு கமெராவை உருவாக்கியுள்ளது. இந்த லென்ஸ்களுக்கான சென்சார்களை பின் பக்கத்திற்கு பதிலாக ஓரத்தில் பொருத்தியுள்ளனர்.

மேலும், இது முந்தைய கமெராக்களை விட மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கமெராவில் கொடுக்கப்பட்டுள்ள 4 சென்சார்களும் இணைந்து ஒரு புகைப்படத்தை எடுக்கின்றன.

பின்னர் அந்த 4 புகைப்படங்களும் ஒரு தெளிவான புகைப்படமாக மாற்றப்படும் புதிய தொழிநுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வெளிச்சம் குறைவான இடத்திலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கமெரா வெளியாவது குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

Related posts: