நாசா அறிமுகம் செய்த MARS ROVER ஒன்லைன் ஹேம்!

Saturday, August 6th, 2016

அமெரிக்காவை தளமாகக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமாக நாசா திகழ்கின்றது.

இந் நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் இறங்கிய பின்னர் கடந்த 2012ம் ஆண்டில் கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியிருந்தது.

இவ்வாறு குறித்த விண்கலம் அனுப்பப்பட்டு இந்த ஆண்டுடன் 4 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.
இதனைக் கொண்டாடும் வகையில் Mars Rover எனும் ஒன்லைன் ஹேமினை நாசா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய இக் ஹேமினை ஒன்லைனில் மட்டுமன்றி அப்பிள் மற்றும் அன்ரோயிட் சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்த முடியும்.

இதேவேளை 2020ம் ஆண்டளவில் கியூரியோசிட்டி ரோவர் 2 எனும் மற்றுமொரு விண்கலத்தினை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பவுள்ளதாக புதிய தகவலையும் நாசா வெளியிட்டுள்ளது.

அத்துடன் தற்போது செவ்வாய் கிரகத்திலுள்ள விண்கலமானது இதுவரை 13.5 கிலோ மீற்றர்கள் தூரம் பயணித்துள்ளதுடன், சுமார் 128,000 புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியுள்ளது. இது தவிர 362,000 தடவைகள் லேசர் கதிரை பாய்ச்சி ஆராய்ச்சியில் ஈடுபட்டும் உள்ளது.

Related posts: