நவீன வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்!
Tuesday, May 3rd, 2016Xiaomi என்பது சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்கனவே காலடி பதித்த இந்த நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கைக் கடிகாரத்தினையும் அறிமுகம் செய்யும் முனைப்பில் உள்ளது.
இது தொடர்பான தகவலை பீஜிங்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குறித்த நிறுவனத்தின் இணை நிறுவுனரும், துணை இயக்குனருமான Liu De வெளியிட்டுள்ளார்.
அதாவது புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட் கைடிகாரம் வடிவமைக்கும் பணி ஆரம்பித்து விட்டதாகவும், அதனை இவ் வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் அல்லது வருட இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி MIUI எனும் இயங்குதளம், Mi Band 2 எனும் இக் கடிகாரம் ஆகிய இரண்டினையும் அநேகமாக மே மாதம் 10ம் திகதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இக் கடிகாரத்தின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம குகை!
65 ஆயிரம் டொலருக்கு விற்பனையானது ஹிட்லரின் உலக உருண்டை!
ஐரோப்பா கண்டத்தில் உள்ள தீவு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை நாடு மாறும் ஆச்சரியம்!
|
|