நட்சத்திரத்திலிருந்து வெளியாகும் வினோத சமிக்ஞை!

Monday, July 17th, 2017

பூமியில் உள்ள வானியலாளர்களால் அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் இருந்து பல்வேறு சமிக்ஞைகள் வெளியாவது அவதானிக்கப்பட்டு வந்துள்ளது.

எனினும் தற்போது பூமியிலிருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து வெளியேறும் வினோத சமிக்ஞை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. Arecibo Observatory எனும் ரேடியோ தொலைகாட்டியின் ஊடாகவே குறித்த சமிக்ஞை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேடியோ சமிக்ஞையானது Ross 128 எனும் நட்சத்திரத்திலிருந்தே வெளிவருவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர். Puerto Rico பல்கலைக்கழக வானியலாளர்களே இதனை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவதானித்துள்ளனர். இதேவேளை இந்த ரேடியோ சமிக்ஞை வெளியாவதற்கு ஏலியன்கள் தான் காரணம் என உறுதியாகக் கூற முடியாது என வானியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts: