தொழில் நுட்பத்தில் அதிதிறன் கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைவு!

Thursday, October 27th, 2016

இலங்கை விநியோக அமைப்புக்களில் வல்லுநர்களாக திகழ்கின்றது என மென்பொருள் நிறுவனமான ஜாவா வேர்ல்ட் (JavaWorld) நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் ஒன்லைன் தொழில்நுட்பத்தில் இலங்கை சிறப்பான நிலையை கொண்டுள்ள ஒரு நாடு எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு வலையமைப்பிற்குள் இருக்கும் கணிணிகளை தொடர்புப்படுத்தல் மற்றும் குறித்த கனிணிகளின் செயற்பாடுகளை குறுஞ்செய்தி மூலம் ஒருங்கிணைத்தல் போன்ற செயற்பாடுகளை விநியோக அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

பொதுவாக சிறந்த நிரலாக்குநர்கள் (Programmers) சீனா மற்றும் ரஷ்யாவில் காணப்படுவதாக JavaWorld குறிப்பிட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவில் ஜப்பானும் சி (C ) நிரலாக்கும் மொழியில் பிரான்சும் மற்றும் தகவல் தொகுப்பில் சுவிட்சர்லாந்தும் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

internet-72

Related posts: