திடீரென இரத்த சிவப்பாக மாறிய நதி!

Friday, September 9th, 2016

சைபீரியாவின் வட பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ள நதி டல்டிகான் இந்த நதியில் இருந்துதான் இப்பகுதியில் உள்ள பெருவாரியான இரசாயன ஆலைகளும் தண்ணீர் சேகரித்து வருகின்றன.

மட்டுமின்றி அந்த ஆலைகளின் கழிவுகளும் இந்த நதியிலேயே கொட்டப்படுவதாக இப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர.

இந்த நிலையில் பனிக்காலத்தில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடாத இந்த நதியானது திடீரென்று இரத்தச் சிவப்பாகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் இரசாயன ஆலையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நடிஸ்டா மெட்டாலுரிஜிகல் பிளாண்ட் என்ற இந்த ஆலையில் இருந்து கொட்டப்படும் கழிவு நீரால் தற்போது இந்த நதி இரத்தச் சிவப்பாக நிறம் மாறியுள்ளது.

இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களால் தங்களது தேவைகளுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலையானது, சுற்றுச்சூழல் குறித்த அனைத்துவகை முன்னேற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது, மட்டுமின்றி நதியின் தண்ணீரில் ஏற்பட்ட மாறுதலுக்கு பின்னர் கழிவு நீரை வெளியேற்றுவதை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் குறிப்பிட்ட நதி சிவப்பாக மாறுவதற்கு இந்த ஆலையின் கழிவுகள் அல்ல எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.

57d034d9c36188bd428b4689

 

 

Related posts: