தவளைகளிடம் உண்டு வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்து!

Friday, April 21st, 2017

தென்னிந்திய பகுதிகளில் உள்ள தவளைகளிடமிருந்து எடுக்கப்படும் பிசுபிசுப்பான திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக மருந்து தயாரிக்கலாம் என ஆய்வு கூறுகிறது. சளிப்படலம் போன்ற ஒரு வண்ணமயமான திரவத்தினை சுரக்கும் தவளையானது கேளராவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதிய ஆய்வின்படி இந்த திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ் நோய்களுக்கு மருந்துகளை தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது.

தவளையிடமிருந்து எடுக்கப்படும் திரவத்திலுள்ள மூலக்கூறுகள் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கமுடியும், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துக்கு சாத்தியமான ஆதாரங்கள் தொடர்பாக ஆய்வாளர்கள் தங்களுடைய விசாரணையை விஸ்தரித்துள்ளனர்.

கேரளாவை சொந்தமாக கொண்ட தவளை இனங்களை (ஹைட்ரோஃபிளாஸ் பேஹுவிஸ்தாரா) கொண்டு மனிதர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கமுடியும், வைரஸ் பாதிப்பில் இருந்தும் மனிதர்களை காப்பாற்ற முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்னிந்தியாவை பிறப்பிடமாக கொண்ட தவளை இனத்தின் மூலக்கூறை எடுத்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

தவளையின் தோலிலிருந்து வெளிப்படும் பிசுப்பிசுப்பான திரவத்தினை கொண்டு ஆய்வு செய்ததில் இரசாயனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு எதிராக செயலாற்ற உருமின் என்றழைக்கப்படும் இந்தக் கூட்டுப்பொருளை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தீர்மானிக்க மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வு செய்துவரும் சர்வதேச ஆராய்ச்சி குழுவில் கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்று உள்ளனர்.

எச்-1 வைரஸ் காய்ச்சல் உட்பட பல்வேறு வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ளும் மூலக்கூறுகள் இந்த திரவத்தில் இடம்பெற்றுள்ளது.