தனி சட்டிலைட் அனுப்ப பேஸ்புக் முடிவு!

Monday, July 23rd, 2018

பேஸ்புக் நிறுவனம், முதல்முறையாக இணைய பயன்பாட்டிற்காக, சுயமாக செயற்கைகோள் ஒன்றை அனுப்ப உள்ளது.

இதற்கு அதீனா என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். பேஸ்புக் தற்போது உலகம் மொத்தத்தையும் இணையம் மூலம் எளிதாக இணைக்க வழி பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இதற்காக ஏற்கனவே அகுலா என்று பறக்கும் பலூன் மூலம் இணையத்தை சில ஆப்ரிக்க கிராமங்களுக்கு வழங்கியது. இப்போது நேரடியாக சாட்டிலைட் அனுப்ப முடிவெடுத்துள்ளது.

இந்த சாட்டிலைட்டிற்கு அதீனா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க இணைய சேவை பயன்பாட்டிற்காக மட்டுமே அனுப்பப்பட உள்ளது. உலகம் முழுக்க எல்லா நாட்டு மக்களும் இந்த சாட்டிலைட் மூலம் இணையத்தை பயன்படுத்தும் வகையில் இதை உருவாக்க இருக்கிறது. இதை வைத்து இப்போது சில சோதனைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இதன் மூலம் எல்லோரும் பேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் மற்ற இணைய சேவையை பயன்படுத்தவும், இந்த சாட்டிலைட் உதவியாக இருக்கும். உலகம் முழுக்க எளிதாக இணையம் மூலம் இணைப்பதே குறிக்கோள் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளனர். அதற்காகவே இந்த சாட்டிலைட்டும் அனுப்ப பட உள்ளது.

இந்த வருடம் இந்த ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தில் இருந்தது பேஸ்புக் நிறுவனம். ஆனால் இடையில் டேட்டா திருட்டு பிரச்சனையால், அவர்களின் பங்குகள் சரிந்து பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்த சாட்டிலைட் அனுப்பப்படும். இதனுடைய பல முக்கிய பலன்களை பேஸ்புக் மறைமுகமாக வைத்துள்ளது.

இந்த நிலையில் இப்படி உலகம் முழுக்க இணையத்தால் இணைக்க ஏற்கனவே எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அடுத்து சில வருடங்களில் ராக்கெட் அனுப்ப உள்ளது. அதற்கு அடுத்து சாப்ட் பேங்க் நிறுவனமும் இப்படி சாட்டிலைட் அனுப்ப உள்ளது. அதேபோல் அமேசானின் ப்ளு ஓரிஜின் நிறுவனமும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

Related posts: