தடுப்பூசிக்கு பதில் இனி பிளாஸ்டரை பயன்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
Thursday, July 6th, 2017தடுப்பூசியை வலியின்றி உடலில் செலுத்தக்கூடிய மிக முன்னேறிய வழிக்கான பரிசோதனைகளை அமெரிக்க ஆய்வாளர்கள் மனிதர்கள் மத்தியில் மேற்கொண்டிருக்கின்றனர். மிகநுண்ணிய ஊசிகளைக்கொண்ட சின்னஞ்சிறு பிளாஸ்டர்பட்டி மூலம் இந்த மருந்தை இனி உடலுக்குள் செலுத்த முடியும்.
இந்த தடுப்பு மருந்தை குளிரூட்டியில் வைத்திருக்கத்தேவையில்லை. தேவைப்படுபவர்கள் மற்றவர் உதவியின்றி தாமே இதை உடலில் ஒட்டிக்கொள்ளலாம். மின்வசதியில் தன்னிறைவை எட்டாத வளர்ந்துவரும் நாடுகளில் இது மிகப்பெரிய புரட்சிகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
கடல்மட்டம் உயர்வினால் 40 மில்லியன் இந்தியர்களுக்கு ஆபத்து-ஐ.நா
உலகின் மிக வயதான கைதி விடுவிப்பு!
தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் !
|
|