டைனோசர்களின் இறப்பில் மர்மம்!
Friday, January 20th, 2017பூமியில் வாழ்ந்து முற்றாக அழிந்துபோனதாகக் கருதப்படும் டைனோசர்கள் தொடர்பில் தற்போதும் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த இராட்சத விலங்கு இனம் அழிந்ததற்கு பூமியுடன் வான் பொருட்கள் மோதியமை காரணமாக இருக்கலாம் எனவும், அமில மழை பெய்தமை காரணமாக இருக்கலாம் எனவும் வெவ்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
எவ்வாறெனினும் குறித்த தாக்கத்தினால் டைனோசர் இனமானது குறுகிய காலத்திலேயே அழிவடைந்து போனதாக இதுவரை கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இது மறுக்கப்பட்டு நாம் நினைப்பதை விடவும் டைனோசர்கள் முற்றாக அழிவடைவதற்கு நீண்ட காலம் சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Potsdam Institute for Climate Impact Research (PIK) ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.மேலும் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் காணப்பட்ட உறை வெப்பநிலையும், இருள் சூழ்ந்த தன்மையுமே டைனோசர்கள் மெதுமெதுவாக அழியக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|