செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Curiosity_render_hiresb Wednesday, June 13th, 2018

நாசாவினால் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ‘ரோவர்’ கலத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் குறித்த கலத்தின் செயற்பாடுகள் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்டுள்ள புழுதிபுயலால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக நாசாவின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கணிப்பின் படி 18 மில்லியன் சதுரகிலோமீற்றர் பரப்பில் இந்த புழுதிப்புயல் வீசுகிறது.

இதனால் சூரியஒளியில் இருந்து தமக்கான சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ரோவர் கலத்துக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.