செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவுள்ள சிறிய ரோபோ!

Wednesday, October 19th, 2016

ரஷ்யாவுடன் இணைந்து எடுக்கும் ஒரு முயற்சியில், ஐரோப்பியவிண்வெளி நிலையம் சிறிய ரோபோ ஒன்றை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் மீது செலுத்த முயற்சிக்கவுள்ளது.

ஸ்கியாப்பரள்ளி என்று அழைப்படும் அந்த சோதனை முயற்சி, தாழ்வான இடத்தை நோக்கி இறங்கும் இயக்கத்தில் தாக்குபிடித்துவிட்டால், அவ்வாறு செயல்பட்ட முதல் ஐரோப்பிய விண்கலம் என்ற பெயரை பெரும்.

ஏனெனில் இதற்கு முன் ரஷிய விண்கலம் ஒன்று 20 நொடிகள் மட்டுமே இவ்வாறு இறங்குகையில் தாக்குபிடித்தது; மேலும் ஐரோப்பிய ஒன்றிய விண்கல முகமையின் விண்கலம் ஒன்று, தரை இறக்கப்பட்டது எனினும் அது செயல்படவில்லை.

இந்த சோதனை முயற்சி மெல்லிய கணிக்க முடியாக செவ்வாய் வளிமண்டலத்தின் மூலமாக, தனது கீழ் இறங்கும் வேகத்தை ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20,000 கிமீ வேகத்திலிருந்து பூஜ்ஜியத்திற்கு குறைக்க வேண்டும்.ஸ்கியாப்பரள்ளி அதன் பேட்டரிகள் தீர்ந்து போவதற்கு முன்னர் அங்கு நான்கு நாட்கள் தங்கி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கும்.

அடுத்த நான்கு வருடங்களில், செவ்வாய் கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வதற்கான தடயங்கள் இருக்கிறதா என்பதை அறிய ரோவர் ஒன்றை அனுப்பும் ஐரோப்பிய விண்கலத்தின் முகமையின் பெரிய முயற்சிக்கு இது ஒரு சோதனை முயற்சியாக பார்க்கப்படுகிறது.

2003 ஆம் ஆண்டு பீகள் 2 என்னும் விண்கல சோதனை, கிறித்துமஸ் தினத்தன்று தரையிறக்கப்பட்டது ஆனால் உடனடியாக அது பழுதாகி போனதால் அதிலிருந்து எந்த ஒரு சமிக்ஞையும் வரவில்லை.

_91981356__88769129_img_3021-copy

Related posts: