செவ்வாய்க்கு செல்லும் சீனா விண்கலம்!
Monday, March 7th, 20162021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா விண்கலம் அனுப்புகிறது. சீனா தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. ரெயில்வே துறையில் விளத்தகு சாதனை படைத்துள்ளது. அதிவேக புல்லட் ரெயில்களை இயக்குவதில் ஜப்பான் போன்ற நாடுகளை விஞ்சி நிற்கிறது.
அதே வேளையில் விண்வெளித்துறையிலும் அடியெடுத்து வைத்து அங்கும் முன்னேரி வருகிறது. சமீபத்தில் சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது.
இந்தியா, அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அதே போன்று சீனாவும் அங்கு விண்கலம் அனுப்பும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இத்தகவலை சீன விண்வெளி ஆய்வு மைய தலைமை அதிகாரி யே பெய் ஜியான் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும் போது, வருகிற 2020–ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடிவு செய்துள்ளோம். 7 முதல் 10 மாதம் பயணம் மேற்கொள்ளும் சீன கம்யூனிஸ்டு கட்சி தொடங்கப்பட்ட 100–வது ஆண்டான 2021–ல் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும் என்றார்.
Related posts:
உருகி வரும் பனிப்பாறைகளால் கடல் மட்டம் பல மீட்டர்கள் அளவு உயரும் அபாயம்!
உலக சாதனைக்காக காத்திருக்கும் இஸ்ரோ!
உலகின் முதல் விமானி இராவணன்தான்!
|
|