சூரிய மண்டலத்தின் அலை வெள்ளி கிரகத்தில்!

வெள்ளி கிரக வளிமண்டலத்தில் உள்ள இராட்சத அலை ஒன்று சூரிய மண்டலத்திலேயே அதுபோன்ற மிகப்பெரிய அலை என நம்பப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு வெள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஜப்பானின் அகட்சுக்கி விண்கலம் அந்த கிரகத்தின் மேல் வளிமண்டலத்தில் பல தினங்களாக அம்பு வடிவான அம்சம் இருப்பதை அவதானித்துள்ளது.
அந்த பிரகாசமூட்டும் அமைப்பு 10,000 கிலோமீற்றர் அளவு கொண்டதாகும். ஒரு தடிப்பமான வளிமண்டலத்தால் மூடப்பட்டிருக்கும் வெள்ளிக் கிரகத்தின் கந்தக அமில மேகங்கள் அந்த கிரகம் தன்னைத் தானே சூழல்வதை விடவும் மேகமாக மேற்கை நோக்கி விநாடிக்கு 100 மீற்றர்கள் வேகத்தில் நகர்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஆய்வு நடத்தி இருக்கும் ஜப்பானிய விஞ்ஞானிகள் வெள்ளியின் பாரிய ஈர்ப்பு அலை ஒன்றே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஈர்ப்பு அலை வெள்ளியின் கீழ் வளிமண்டலத்தில் தோன்றி மலைகளைக் கடந்து வெள்ளியின் தடித்த வளிமண்டலத்தின் வழியாக மேல்நோக்கி பரவுகிறது. சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள வெள்ளி நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து ஒளி மிகுந்ததாகும்.
Related posts:
|
|