சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு முறை – விஞ்ஞானிகள் சாதனை!

201805071138292381_New-tech-purifies-water-using-sunlight_SECVPF Wednesday, May 9th, 2018

சூரிய ஒளியைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.

இயந்திரம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குடிநீரை விஞ்ஞானிகள் சுத்திகரித்துள்ளனர்.

கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க தத்துவவியல் விஞ்ஞானி அரிஸ்ரோட்டில் தண்ணீரை சுத்திகரிக்க புதிய முறையை கையாண்டார். முக்கோண வடிவிலான கறுப்பு நிற கார்பன் பேப்பரை தண்ணீரில் மூழ்கடித்து அதை சுத்திகரித்தார்.

அதை அடிப்படையாக கொண்டு சூரியஒளியை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

மிக குறைந்த செலவில் இதை செயற்படுத்த முடியும். இயற்கை பேரிடர் காலங்களில் இது மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.